கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தொடரின் 5வது லீக் ஆட்டம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சும்பன் கில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா களம் இறங்கினர்.
குஜராத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், திணறி வந்த பிரப் சிம்ரன் சிங் அர்சத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 8 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் மறுமுனையில் இருந்த பிரியான்ஷ் ஆர்யா எந்த குஜராத் பந்து வீச்சாளரையும் பாராமல், பந்துகளை பவுண்டரிகள் பக்கம் அனுப்பினார்.
மேலும் படிங்க: GT vs PBKS: பலம் வாய்ந்த இரு அணிகள்.. வெல்லப்போவது யார்? பிளேயிங் 11 என்ன?
இடம் கை பேட்ஸ்மேனான இவர், 200 ஸ்டைக் ரேட்டுக்கு குறையாமல் விளையாடினார். இவர் 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில், ரசித் கான் பந்து வீச்சில் சாய் சுதர்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். இதில் 7 ஃபோர்கள் மற்றும் 2 சிக்சர்களும் அடங்கும். இந்த ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அந்த வகையில், பிரியான்ஷ் ஆர்யா பேட்டிங் பஞ்சாப் அணிக்கு பவர் பிளேவில் ரன்களை குவிக்க உதவி இருக்கிறது. தற்போது பஞ்சாப் அணி 9 ஓவர்கள் முடிவில் 100 ரன்களை எடுத்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் உமர்சாய் பேட்டிங் செய்து வருகின்றனர்.
யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
24 வயதான பிரியான்ஷ் ஆர்யா இடது கை பேட்ஸ்மேன் ஆவார். இவர் டெல்லியை சேர்ந்தவர். இவர் சையத் முஷ்டாக் அலி டிராபிக்கான டெல்லி அணியில் இடம் பெற்றுத் தந்தது . உத்தரபிரதேசத்திற்கு எதிரான போட்டியில் அவர் 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்தார்.
அதேபோல் கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த லீக் போட்டி ஒன்றில், டெல்லி அணிக்காக விளையாடிய இவர், ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களால் டெல்லி அணியின் யுவராஜ் சிங் என போற்றப்பட்டார். இந்த நிலையில், பஞ்சாப் அணிக்காக விளையாடு இவர், அதே அதிரடி பாணியை தொடர்கிறார்.
மேலும் படிங்க: கே.எல். ராகுலை போல ரிஷப் பண்ட்டை திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?