ஜம்மு – காஷ்மீரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்

நியூயார்க்,

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமைதி நடவடிக்கைகள் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான திறந்த விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் ஐ.நாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய பர்வதனேனி ஹரீஷ்,

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இனி எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எல்லை பகுதிகளை ஆக்கிரமித்து வருகிறது.

பாகிஸ்தான் பிரதிநிதி இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும் பாகிஸ்தான் அரசு ஆதரவுடன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது.பாகிஸ்தான் பிரதிநிதி இந்திய யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் குறித்து தவறான தகவல்களைத் தெரிவித்ததை இந்தியா கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இதுபோன்று தொடர்ச்சியாக தெரிவிக்கப்படும் கருத்துகளால் அவர்கள் செய்யும் சட்டவிரோத உரிமை மீறல்களையோ, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையோ நியாயப்படுத்த முடியாது. தங்களது பிளவுவாத கருத்துக்களின் மூலம் இந்த மன்றத்தின் கவனத்தை திசை திருப்ப வேண்டாமென்று பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம் என்றார்.

இந்தியா அரசியலமைப்பின் 370-வது பிரிவான ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ஆகஸ்ட் 5, 2019 அன்று ரத்து செய்தது. இதன்மூலம் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.