சென்னை: நெல்லையில் நடைபெற்ற ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நெல்லை டவுன் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான ஜாகீா் உசேன் பிஜிலிக்கும், முகமது தௌபிக் என்ற கிருஷ்ணமூா்த்திக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மார்ச் 18 ஆம் தேதி காலை தொழுகையை முடித்துவிட்டுச் சென்ற பிஜிலி ஒரு […]
