பாலசுப்பிரமணியர் திருக்கோயில், வடசென்னிமலை, சேலம் மாவட்டம் தல சிறப்பு: கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் குழந்தை வடிவில் மேற்கு நோக்கியபடி சிரித்த கோலத்திலும், அருகிலுள்ள தண்டாயுதபாணி துறவற கோலத்திலும், உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் கிரகஸ்த நிலையிலும் (குடும்பம்) காட்சி தருகின்றனர். இவ்வாறு முருகன் ஒரே தலத்தில் மூன்று கோலங்களிலும் காட்சி தருவது அபூர்வம் இந்த மூன்று மூர்த்திகளும் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். பொது தகவல்:: 5 நிலைராஜ கோபுரம், தொடக்கத்தில் சுயம்புமூர்த்தி சன்னதியும், அருகில் தண்டாயுதபாணி சன்னதியும் மட்டும் இருந்தது. பக்தர் […]
