`மீண்டு வருவேன்' – மரணத்தோடு போராடிய ஷிஹான் ஹுசைனி உயிரிழந்தார்!

கராத்தே ஹுசைனி என்று அறியப்படும் ஷிஹான் ஹுசைனி ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். அவரது சிகிச்சைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பிலும் மற்ற சிலர் சார்பிலும் உதவிகள் செய்யப்பட்டன. தொடர் சிகிச்சையில் இருந்தவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரின் மாணவர்கள், மாணவிகளிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஷிஹான்  ஹுசைன்
ஷிஹான் ஹுசைனி

ஷிஹான் ஹுசைனி

கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி மதுரையைச் சேர்ந்தவர். கராத்தே மாஸ்டரான இவர், பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக இருந்தவர்.

“மீண்டு வருவேன்…”

அவருக்கு இரத்தப் புற்றுநோய், அப்லாஸ்டிக் அனீமியா இருப்பது உறுதிசெய்யப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில்கூட `மீண்டு வருவேன்’ எனக் குறிபிட்டிருந்தது அவரின் மாணவர்கள் உள்பட பலரின் மனதை உறையச் செய்தது.

ஷிஹான் ஹுசைனி
ஷீஹான் ஹுசைனி

உடல் உறுப்பு தானம்

சமீபத்தில் அவர் தன் முகநூல் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை தானம் செய்கிறேன். நான் இறந்த 3 நாள்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு என் உடலை தானம் செய்ய விரும்புகிறேன். என் இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக, என் வில்வித்தை – கராத்தே மாணவர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.