Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' – ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர் சிறப்பாக குஜராத் அணியைக் கட்டுப்படுத்தினர். பஞ்சாப் அணிக்காக சிறப்பாக ஆடி 97 ரன்கள் சேர்த்த அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கி விட்டு அவர் சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.

Shreyas Iyer - Gill
Shreyas Iyer – Gill

ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், ‘ஐ.பி.எல் இன் முதல் போட்டியிலேயே இப்படியொரு நல்ல இன்னிங்ஸை ஆடி 97 ரன்களை எடுத்ததில் மகிழ்ச்சி. முதல் பந்திலேயே பவுண்டரி அடித்ததும் ரபாடாவை சிக்சருக்கு அடித்ததும் எனக்கு பெரும் உத்வேகத்தை கொடுத்தது. சஷாங்க் சிங் எடுத்த 44 ரன்கள் அணிக்கு ரொம்பவே தேவைப்பட்டது. அவரின் இன்னிங்ஸால்தான் நாங்கள் கூடுதலாக 30-40 ரன்களை எடுத்தோம்.

காற்றில் ஈரப்பதம் அதிகமாக தொடங்கும் போது பௌலிங் செய்ய சவாலாக இருக்கும் என்பதை அறிந்திருந்தோம். இடையில் பந்து கொஞ்சம் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. சாய் சுதர்சனின் விக்கெட்டை அதனால்தான் எடுத்தோம். பந்தில் எச்சிலை தடவிக்கொள்ளலாம் என அனுமதித்திருப்பது பௌலர்களுக்கு பெரிதாக உதவுகிறது.

Shreyas Iyer
Shreyas Iyer

வைஷாக் விஜயகுமார் சுவாரஸ்யமான குணாதிசயத்தைக் கொண்டவர். அவரிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன. அவரால் நினைத்த இடத்தில் நினைத்த லெந்த்தில் வீச முடியும். அர்ஷ்தீப் சிங்கும் டெத் ஓவர்களில் நிறையவே உதவினார். சீசனுக்கு முன்பாகவே ஒரு அணியாக கூட்டுறவை எட்ட என்னெவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தோம். அணியின் மீட்டிங்களில் கூட கேப்டனான நான் மட்டும் பேசாமல் அனைவரும் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தினோம்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.