இந்தியாவின் முதல் முழுமையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனர் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின் ‘அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்’ (SAMEER), டெல்லியில் உள்ள AIIMS மருத்துவமனையுடன் இணைந்து 1.5 டெஸ்லா MRI ஸ்கேனரை உருவாக்கியுள்ளது. சமீர் உருவாக்கிய புதிய எம்ஆர்ஐ ஸ்கேனர் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது, அதன் மருத்துவ பரிசோதனை மற்றும் மதிப்பீடு இந்த ஆண்டு அக்டோபரில் நடத்தப்படும். […]
