சென்னை: கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக கட்சி இப்போது தப்பு கணக்கு போடுகிறது என அதிமுக உறுப்பினருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், உள்துறைஅமைச்சருடன் எடப்பாடி சந்திப்பு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு அரசியல் களத்தில் இந்த சந்திப்பு பேசும்பொருளாக மாறிய நிலையில், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேசுகையில், அ.தி.மு.க. என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை […]
