சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் 3 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா – பீஜப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் – மாவோயிஸ்ட் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பிறகு 3 மாவோயிஸ்ட்களின் உடல்களை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து மீட்டனர். மேலும் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களையும் கைப்பற்றினர்.

மோதலில் இறந்த 3 மாவோயிஸ்ட்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பாதுகாப்பு படையினர் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.

வரும் 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் இந்தியாவை இடதுசாரி தீவிரவாதம் இல்லாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையொட்டி மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் பீஜப்பூர், கான்கெர் மாவட்டங்களில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற 2 மோதல் சம்பவங்களில் 30 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.