கொரியாவின் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (63), மாரடைப்பால் காலமானதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஹீ இறந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்தில் 1988ம் ஆண்டு சேர்ந்த ஹான் ஜாங்-ஹீ தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை தொலைக்காட்சி தொடர்பான பிரிவில் கழித்தார். தொலைக்காட்சி உற்பத்தித்திறனில் உலகின் பிற நிறுவனங்களை விட சாம்சங் முன்னணியில் இருப்பதற்கு […]
