டிராவிட் ஒரு முன்மாதிரி, கம்பீருக்கு பேராசை என விளாசிய சுனில் கவாஸ்கர் – ஏன் தெரியுமா?

Sunil Gavaskar News Tamil : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எப்போதும் அதரடி கருத்துக்களை தெரிவிக்கக்கூடியவர். குறிப்பாக இந்திய அணி, பிசிசிஐ, இந்திய அணியில் விளையாடும் பிளேயர்கள் எல்லோரையும் விமர்சித்துவிடுவார். லேட்டஸ்டாக இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை விமர்சித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளரை இப்போது விமர்சிக்க காரணம் என்ன? என்று பார்த்தால், பிசிசிஐ அறிவித்த பரிசுத் தொகையில் கவுதம் கம்பீர் பெறும் தொகை மீது சுனில் கவாஸ்கர் விமர்சனம் வைத்துள்ளார். அது என்ன? முழு விவரம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

இந்திய அணி வெற்றி

பாகிஸ்தான் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. தோனி தலைமையிலான இந்திய அணி, அண்மையில் ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்துக்கு பிசிசிஐ பரிசுத் தொகையை அறிவித்தது. கேப்டன், பிளேயர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு மொத்தமாக பெரும் தொகையை பரிசாக அறிவித்திருக்கிறது. இதில் பயிற்சியாளருக்கு அதிக தொகை பரிசாக கிடைக்கப்போகிறது.

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

இதனை விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் பிளேயர் சுனில் கவாஸ்கர். பிசிசிஐ அறிவித்திருக்கும் பரிசுத் தொகையை கவுதம் கம்பீர் பெறுவது குறித்து ஏன் எந்த பதிலும் இதுவரை பேசாமல் இருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார். டி20 உலகக்கோப்பை இந்திய அணி வென்றபோது பிசிசிஐ பரிசுத் தொகை அறிவித்தது. அப்போது பயிற்சியாளர் டிராவிட்டுக்கு அதிக பரிசுத் தொகை அறிவித்தது. ஆனால், டிராவிட் ஒட்டுமொத்த குழுவுக்கும் ஒரே மாதிரியான பரிசுத் தொகை பிசிசிஐ கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன், சக பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட எல்லோரும் பெற்ற தொகையை மட்டுமே வாங்கிக் கொண்டார். டிராவிட் செய்த இந்த அணுகுமுறை ஒருசூப்பரான முன்மாதிரி. எல்லோரும் பாராட்ட வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார். 

கவுதம் கம்பீர் விமர்சனம்

ஆனால், கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ அதிக பரிசுத் தொகை அறிவித்திருக்கும்போது, சக பயிற்சியாளர்கள் பெறும் தொகையே போதும் என ஏன் அறிவிக்கவில்லை. அவர் இதுவரை இதுபற்றி பேசாமல் மவுனம் காக்கிறார் என்றாலே, அவருக்கு அதிக தொகை வருவதை விரும்புகிறார் என அர்த்தம். அது அவருடைய விருப்பம் என்றாலும் ராகுல் டிராவிட் போல் கவுதம் கம்பீரும் செயல்பட்டால் இன்னொரு முன்மாதிரியாக இருக்கும் என சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் படிங்க: குஜராத் பந்து வீச்சை சிதறடித்த இளம் வீரர்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

மேலும் படிங்க: கே.எல். ராகுலை போல ரிஷப் பண்ட்டை திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. டிரஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.