டெல்லி அணியில் இணையும் கே. எல். ராகுல்.. எந்த போட்டியில்?

ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை மொத்தமாக வீரர்கள் மாறி உள்ளனர். குறிப்பாக கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்,. லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே. எல். ராகுல் என முக்கிய வீரர்கள் அணி மாறி உள்ளனர். இவர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர். டெல்லி அணியால் வாங்கப்பட்ட கே. எல். ராகுல் தனக்கு வந்த கேப்டன் பதவியை நிராகரித்து ஒரு வீரராக அணியில் பயணிப்பதாக தெரிவித்தார். 

இச்சூழலில் கே. எல். ராகுல் தனது குழந்தை பிறக்க உள்ளதாக டெல்லி அணியில் இணையாமல் இருந்தார். அதன்படி நேற்று முன்தினம் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. அது தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர். இதற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் எப்போது டெல்லி அணிக்கு திரும்புவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிங்க: SRH vs LSG: பயமுறுத்தும் பேட்டிங்… அய்யோ பாவம் பௌலிங் – 300 ரன்களை எந்த அணி அடிக்கும்?

இந்த நிலையில், கே. எல். ராகுல் விரைவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு திரும்ப உள்ளதாகவும், குறிப்பாக வரும் 30ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கல் வெளியாகி உள்ளது. இவர் அணிக்கு திரும்பும் பட்சத்தில் டெல்லி அணியின் மிடில் ஆர்டர் கூடுதல் பலம். இச்செய்தி டெல்லி அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. 

அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது முதல் போட்டியில் லக்னோ அணியை எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற அக்சர் படேல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 209 ரன்கள் அடித்தது. அந்த அணி மிட்செல் மார்ஸ் 72 ரன்களும் நிகோலஸ் பூரான் 75 ரன்களையும் அடித்தனர். அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி அணி கடுமையாக சொதப்பியது. பவர் பிளேவின் போதே 4 விக்கெட்களை இழந்து திணறியது. 

போட்டி முழுக்க முழுக்க லக்னோ அணியின் பக்கம் சென்றுகொண்டிருந்த நிலையில், விப்ராஜ் நிகாம் மற்றும் அசுதோஷ் சர்மா ஆட்டத்தை மாற்றினர். இறுதியில் அசுதோஷ் சர்மா போட்டியை முடித்து வைத்தார். அவர் 66 ரன்களை அடித்திருந்தார். இந்த நிலையில், கே. எல். ராகுலும் அந்த அணியில் இணைந்துவிட்டால், கூடுதல் பலத்துடன் டெல்லி அணி காணப்படும். 

மேலும் படிங்க: இந்த பவுலருக்கு பதிலா இவர கொண்டு வாங்க.. ஆர்சிபி-யை வீழ்த்த சிஎஸ்கே போடும் ஸ்கெட்ச்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.