துபாய்,
பெண்கள் டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா (753 புள்ளி) 3-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பெத் மூனி முதல் இடத்திலும், 2வது தஹிலா இடத்திலும் உள்ளனர். முதல் 10 இடங்களில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 11வது இடத்தில் உள்ளார்.
Related Tags :