Jio 2025 Recharge Plan: இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio), ஏர்டெல்(Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறி வருகிறது. ஏர்டெல் , வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் காட்டிலும் ஜியோ பல அற்புதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. முக்கியமாக ஜியோ சிறந்த மற்றும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு நீண்ட நாட்கள் செல்லுபடியாகும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஜியோ திட்டத்தில் 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோவின் 200 நாள் திட்டத்தில் என்ன சிறப்பு?
ஜியோவின் இந்த புதிய திட்டத்தில் பல சிறந்த அம்சங்கள் நிறைந்துள்ளது. இதன் விலை ரூபாய் 2025 ஆகும். மேலும் இது 5G ரீசார்ஜ் திட்டங்களில் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும். இதில், வாடிக்கையாளர்கள் இலவச எஸ்எம்எஸ் மற்றும் 5ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் இலவச அழைப்பையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் மொத்தம் 500 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது பயனர்கள் ஒவ்வொரு நாளும் 2.5 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான டேட்டா பயன்படுத்தப்பட்டால், இணைய வேகம் குறையும். இந்த திட்டத்தை பெற்ற கஸ்டமர்கள் 5ஜி சலுகையை பெற்றுள்ளபட்சத்தில், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த கூடுதல் நன்மைகளையும் பெறுவீர்கள்
ஜியோ காலிங் மற்றும் டேட்டாவை வழங்குவது மட்டுமல்லாமல், அதன் பயனர்களுக்கு பல சிறந்த வசதிகளையும் வழங்குகிறது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரின் 90 நாட்கள் இலவச சந்தாவைப் பெறுவார்கள், இதில் புதிய திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களைப் பார்வையிடலாம். இது தவிர, இந்த திட்டத்தில் 50 ஜிபி வரை AI கிளவுட் சேமிப்பகமும் கிடைக்கிறது, இது மட்டுமல்லாமல், ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டிவியின் இலவச சந்தாவையும் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தை யார் பெற முடியும்?
நீண்ட வேலிடிட்டி, ஏராளமான டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் பல கூடுதல் அம்சங்களை வழங்கும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஜியோவின் இந்த திட்டம் சிறப்பான தேர்வாகும்.