KKR vs RR: கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் தொடர் மார்ச் 22ஆம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. அனைத்து அணிகளும் தங்களது முதல் பொட்டியை விளையாடி முடித்துவிட்டனர். இந்த நிலையில், இத்தொடரின் 6வது லீக் ஆட்டம் இன்று (மார்ச் 26) குவஹாத்தி, பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இப்போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணிகளுமே விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்திருப்பதால், இப்போட்டியில் வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குகின்றனர். இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. கொல்கத்தா அணி பெங்களூரு அணியுடனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும் தோல்வியை அடைந்தனர்.
இரு அணிகளின் பலம் பலவீணம் என்ன?
ராஜஸ்தான் ராயல்ஸ்: பேட்டிங்கை பொறுத்தவரை ராஜ்ஸ்தான் அணியில் பிரச்சனை இல்லை, பலமாகவே உள்ளது. கடந்த போட்டியில் இம்பேக்ட் வீரராக சஞ்சு சாம்சன் களம் இறங்கி ரன்களை குவித்தார். அதேபோல் இப்போட்டியிலும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துரூவ் ஜூரல் நல்ல ஃபார்மில் உள்ளார். ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை அவர் ஃபார்மிற்கு திரும்ப வேண்டும். ரியார் பராக் இந்த போட்டியில் பேட்டிங்கில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹிட்டராக ஹெட்மேயர் போன்றோர் இருக்கின்றனர். எனவே பேட்டிங்கில் ராஜஸ்தான் அணி பலமாக உள்ளது.
மேலும் படிங்க: டிராவிட் ஒரு முன்மாதிரி, கம்பீருக்கு பேராசை என விளாசிய சுனில் கவாஸ்கர் – ஏன் தெரியுமா?
பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சற்று பலவீணமாகவே தெரிகிறது. ஆர்சர், சந்தீப் சர்மா, தீக்சனா போன்றோர் இருந்தாலும், கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக ஆர்சர் 4 ஓவர்கள் வீசி 74 ரன்கள் கொடுத்தார். இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு மோசமான சாதனை ஆகும். எனவே பந்து வீச்சில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: பேட்டிங்கில் டி காக், நரைன், ரஹானே, ரிங்கு சிங் ஆகியோர் அணிக்கு பலமாக இருக்கின்றனர். கடந்த போட்டியில் ராஹானே, நரைன் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்களும் பங்காற்றினால் இப்போட்டியில் வெற்றி பெறலாம். அதேபோல் பந்து வீச்சில் நரைன், வருண், வைபவ் அரோரா ஆகியோர் இருந்தாலும், கடந்த போட்டியில் சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர். இது அந்த அணியின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது. எனவே பந்து வீச்சில் கவம் செலுத்த வேண்டி உள்ளது.
நேருக்கு நேர்
இந்த இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளது. அதில், இரு அணிகளும் தலா 14 போட்டிகளில் வென்றுள்ளனர். இரு போட்டிகளுக்கு முடிவு ஏதும் இல்லை. கடந்த சீசனில் இந்த அணிகள் மோதிக்கொண்ட இரண்டு போட்டிகளில் ஒரு போட்டி மழையால் ரத்தானது. ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
பிட்ச் ரிபோர்ட்
இப்போட்டி குவஹாத்தி, பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதமாக இருக்கும் என கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பேட்டர்கள் ரன்களை குவிப்பார்கள். அதேசமயம் வேகப்பந்து வீச்சுக்கும் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
நேரம் மற்றும் ஸ்டிரிமிங்
இப்போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு வீசப்பட்டு, 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.
இரு அணிகளுக்கான உத்தேச பிளேயிங் 11
ராஜஸ்தான் ராயல்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக் (கேப்டன்), நிதிஷ் ராணா, துருவ் ஜூரல் (விகீ), ஷிம்ரோன் ஹெட்மியர், ஷுபம் துபே, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா, ஃபசல்ஹாக் ஃபரூக்கி. இம்பேக்ட் வீரர்: சஞ்சு சாம்சன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: குயின்டன் டி காக் (விகீ), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன்/ஆன்ரிச் நார்ட்ஜே, வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா. இம்பேக்ட் வீரர்: ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.
மேலும் படிங்க: லக்னோ அணிக்கு குட் நியூஸ்.. வருகை தரும் முக்கிய வீரர்?