தமிழின் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணமடைந்துள்ளார். 48 வயதான மனோஜ் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.
மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவையில் இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா வெளியிட்ட வீடியோவில், என்னுடைய நண்பர் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்திகேட்டு மிகவும் அதிர்ந்துபோனேன்.
என்ன சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நடந்திருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், நிகழ்வதை நம்மால் தடுக்க இயலாது, ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். காலம் விதித்திருக்கின்ற காரணத்தால், மனோஜின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.” எனப் பேசியுள்ளார்.