ஆடம்பர எலக்ட்ரிக் எம்ஜி சைபர்ஸ்டெர், M9 முன்பதிவு துவங்கியது

ஜேஎஸ்டபிள்யூ-எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் வாகனங்களுக்கான எம்ஜி செலக்ட் டீலர்கள் மூலம் சைபர்ஸ்டெர் மற்றும் M9 எலக்ட்ரிக் எம்பிவி என இரு மாடல்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ள நிலையில் கட்டணமாக ரூ.51,000 வசூலிக்கப்படுவதனால், விலை ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு டெலிவரி துவங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக எம்ஜி செலக்ட் டீலர்கள் சென்னை, மும்பை, தானே, புனே, டெல்லி, குர்கான், சண்டிகர், பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, கொச்சி மற்றும் சூரத் என மொத்தமாக 13 நகரங்களில் துவங்கப்பட்டுள்ளது.

MG M9

கருப்பு, வெள்ளை மற்றும் கிரே என மூன்று விதமான நிறங்களை பெற உள்ள எம்9 ஆடம்பர எலக்ட்ரிக் எம்பிவி காரில் 90kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 240 bhp and 350 Nm வெளிப்படுத்தும் நிலையில் முழுமையான சிங்கிள் சார்ஜில் 430 கிமீ ரேஞ்ச் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த காரில் உயர் ரக ஆடம்பர வசதிகளுடன் மிகவும் நவீனத்துவமான பாதுகாப்பு வசதிகளான ADAS உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.

MG Cyberster

மேல்நோக்கி திறக்கும் வகையிலான சிசர் கதவுகளை பெற்றுள்ள சைபர்ஸ்டெரில் 510hp பவர் மற்றும் 725Nm டார்க் வெளிப்படுத்தும் மோட்டார் பயன்படுத்தப்பட்டு 77Kwh பேட்டரியை கொண்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் 0-100 கிமீ வேகத்தை எட்ட 3.2 நொடிகள் போதும் எனவும், 500 கிமீ ரேஞ்ச் வழங்கும் என இந்நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் டீலர்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.