எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேச எழுந்த போது அவரை பேச அனுமதிக்காமல் அவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லாவின் செயலைக் கண்டித்து இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியினர் அவரை சந்தித்து முறையிட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாடி, டிஎம்சி , திமுக, கேரள காங்கிரஸ், ஆர்ஜேடி, ஐயுஎம்எல், ஆர்எல்பி மற்றும் எம்டிஎம்கே ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கூறுகையில், ‘பல […]
