குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தை (Institute of Rural Management Anand – IRMA) கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதியான மனிதவளத்தை உருவாக்குவதற்கான ஒரு பல்கலைக்கழகமாக நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட திரிபுவன் சஹ்காரி பல்கலைக்கழக மசோதா, 2025 மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, இந்தியாவில் கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் அமுல் பால் கூட்டுறவு நிறுவனத்திற்கு அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவருமான திரிபுவன்தாஸ் கிஷிபாய் படேலின் பெயரை […]
