சென்னையில் வடமாநில ‘இரானி’ கொள்ளையன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை; காட்​டி கொடுத்த ‘ஷூ’ – என்ன நடந்தது?

சென்னை: சென்​னை​யில் அடுத்​தடுத்து 6 மூதாட்​டிகளிடம் நகை பறிப்​பில் ஈடு​பட்ட வெளி​மாநில இரானி கொள்​ளை​யன் ஜாபர், தரமணி ரயில் நிலை​யம் அருகே நேற்று அதி​காலை என்​க​வுன்ட்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். விமானம், ரயி​லில் ஏறி தப்ப முயன்ற மற்ற 2 கொள்​ளை​யர்​களும் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

சென்​னை​யில் நேற்று முன்​தினம் காலை 6 மணி முதல் 7 மணிக்​குள் சைதாப்​பேட்​டை, சாஸ்​திரி நகர், திரு​வான்​மியூர், கிண்​டி, வேளச்​சேரி​யில் மொத்​தம் 6 இடங்​களில் 6 மூதாட்​டிகளிடம் அடுத்​தடுத்து செயின் பறிக்​கப்​பட்​டது. திரு​வான்​மியூரில் செயின் பறிப்​பின்​போது படு​காயமடைந்த மூதாட்​டி, மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். இச்​சம்​பவம் பெரும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, செயின் பறிப்பு கொள்​ளை​யர்​களை பிடிக்க
உடனடி​யாக தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. விமானத்​தில் தப்ப முயன்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜாபர் உசேன் இரானி (32), மிசம்சா மேசம் இரானி (20), சென்ட்​ரலில் இருந்து ரயில் மூலம் தப்​பிய சல்​மான் உசேன் இரானி (32) ஆகிய 3 பேர் சுற்றிவளைத்து கைது செய்​யப்​பட்​டனர்.

பறித்த நகைகள், செயின் பறிப்​புக்கு பயன்​படுத்​திய இருசக்கர வாக​னம் ஆகிய​வற்றை மீட்​ப​தற்​காக 3 பேரை​யும் தரமணி பகு​திக்கு திரு​வான்​மியூர் காவல் நிலைய ஆய்​வாளர் புகாரி தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் நேற்று அதி​காலை 2.30 மணி அளவில் அழைத்​துச் சென்​றனர். அப்​போது, ஜாபர் தங்​களது இருசக்கர வாக​னத்​தில் ஏற்​கெனவே மறைத்து வைத்​திருந்த நாட்டு துப்​பாக்​கியை எடுத்து போலீ​ஸாரை நோக்கி 2 முறை சுட்​டார். இதையடுத்​து,
போலீ​ஸார் தற்​காப்​புக்​காக சுட்​ட​தில் நெஞ்​சில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்​திலேயே ஜாபர் உயி​ரிழந்​தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்​காக ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டது. இதுகுறித்து போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்ள நிலை​யில், மாஜிஸ்​திரேட் விசா​ரணை​யும் நடந்து வரு​கிறது.

என்​க​வுன்ட்​டர் குறித்து செய்​தி​யாளர்​களிடம் சென்னை பெருநகர காவல் ஆணை​யர் அருண் நேற்று கூறிய​தாவது: கைது செய்​யப்​பட்ட 3 கொள்​ளை​யர்​களும் இரானி கொள்ளை கும்​பலை சேர்ந்​தவர்​கள். மும்​பையை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படு​பவர்​கள். போலீஸ்​போல நடித்து கவனத்தை திசை​திருப்பி நகை பறிப்​பில் ஈடு​படு​வது இவர்​களது பாணி. தற்​போது பெண்​களிடம் நேரடி​யாக நகை பறித்​துள்​ளனர். சென்​னை​யில் 3 பெண்​களிடம் அடுத்​தடுத்து நகை பறிக்​கப்​பட்​ட​தாக தகவல் கிடைத்​ததும், வயர்​லெஸ் மூலம் காவல் அதி​காரி​களை உடனே உஷார்​படுத்​தினேன். அதற்​குள் மேலும் 3 பெண்​களிடம் நகை பறிப்பு நடை​பெற்​றது. கொள்​ளை​யர்​கள் தப்பி செல்​வதை தடுக்​கும் வகை​யில் சென்னை முழு​வதும் 56 இடங்​களில் வாகன சோதனை நடத்​தப்​பட்​டது. கூடு​தல் காவல் ஆணை​யர் கண்​ணன் தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் களத்​தில் இறக்​கப்​பட்​டனர். 100 கண்​காணிப்பு கேம​ராக்​களின் பதிவு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன.

நகை பறிப்​பில் ஈடு​பட்​டது இரானி கொள்​ளை​யர்​கள் என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. விமானத்​தில்​தான் அவர்​கள் தப்பி செல்​வார்​கள் என்​ப​தால், கூடு​தல் ஆணை​யர் கண்​ணன் தலை​மை​யில் ஒரு தனிப்​படை உடனே விமான நிலை​யம் விரைந்​தது. ஹைத​ரா​பாத் செல்​லும் ‘இண்​டிகோ’ விமானத்​தில் ஏறி அமர்ந்​திருந்த ஒரு கொள்​ளை​யனை விமான நிலைய காவல் ஆய்​வாளர் பாண்டி தலை​மையி​லான போலீ​ஸார் கைது செய்​தனர். மும்பை செல்​லும் ஏர் இந்​தியா விமானத்​தில் ஏற தயா​ராக விமான நிலை​யத்​தில் காத்​திருந்த இன்​னொரு கொள்​ளை​யனிடம் சந்​தேகத்​தின் பேரில் விமான நிலைய அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர். பின்​னர், அவரும் கைது செய்​யப்​பட்​டார்.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், 3-வது கொள்​ளை​யன் விஜய​வாடா செல்​லும் பினாகினி எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் தப்​பிச் சென்​றது தெரிய​வந்​தது. ரயில்வே பாது​காப்பு படை போலீ​ஸாரின் உதவி​யுடன் ஆந்​திர மாநிலம் ஓங்​கோல் ரயில் நிலை​யத்​தில் அவரும் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை​யில் செயின் பறிப்​புக்கு அவர்​கள் பயன்​படுத்​திய இரு சக்கர வாக​னம் கர்​நாடக மாநிலம் விதார் பகுதி பதிவு எண் கொண்​டது.

அவர்​களது இருசக்கர வாக​னத்தை மீட்க சென்​ற​போது, என்​க​வுன்ட்​டர் நடந்​துள்​ளது. சுட்​டுக் கொல்​லப்​பட்ட கொள்​ளை​யன் ஜாபர் மீது மும்​பை​யில் 50-க்​கும் மேற்​பட்ட செயின் பறிப்பு வழக்​கு​கள் உள்​ளன. கடந்த டிசம்​பர் மாதம்​தான் சிறை​யில் இருந்து வெளியே வந்​துள்​ளார். அவர் ஏற்​கெனவே சென்​னைக்கு வந்​திருக்​கலாம் என்று கருதுகிறோம். அவர்​தான் வாக​னத்தை ஓட்டி சென்​றுள்​ளார். இரானிய கொள்ளை கும்​பலில் மிக முக்​கிய​மான 20 பேர் பட்​டியலில் 3-வது இடத்​தில் ஜாபர் இருந்​துள்​ளார். அவரது உறவினர்​களுக்கு தகவல் தரப்​பட்​டுள்​ளது. பிரேத பரிசோதனை முடிந்​தவுடன் அவரது உடல் ஒப்​படைக்​கப்​படும்.

சென்​னை​யில் 5,500 ரவுடிகள்: சென்​னையை பொருத்​தவரை, ரவுடிகள் பட்​டியலில் 68 ‘ஏ பிளஸ்’ ரவுடிகள் உட்பட மொத்​தம் 5,500 குற்​ற​வாளி​கள் உள்​ளனர். அது​போன்ற ரவுடிகள், போதைப் பொருள் கடத்​தலில் ஈடு​படு​வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. திரு​மங்​கலம் காவல் நிலை​யத்​தில் நடந்த லஞ்ச விவ​காரம் தொடர்​பாக காவல் உதவி ஆணை​யர், எஸ்​.ஐ. மீது விசா​ரணை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.
கூடு​தல் காவல் ஆணை​யர் கண்​ணன், நுண்​ணறிவு இணை ஆணை​யர் தர்​ம​ராஜன், துணை ஆணை​யர் ராமமூர்த்தி ஆகியோர் உடன் இருந்​தனர்.

அருண் உத்​தர​வில் 4-வது என்​க​வுன்​ட்டர்: சென்னை காவல் ஆணை​ய​ராக அருண் பொறுப்​பேற்ற சில நாட்​களி​லேயே, ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் ரவுடி திரு​வேங்​கடம் என்​க​வுன்ட்​டர் செய்​யப்​பட்​டார். அதை தொடர்ந்​து, ரவுடிகள் காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா கொல்​லப்​பட்ட நிலை​யில், தற்​போது இரானி கொள்​ளை​யன் ஜாபர் என்​க​வுன்ட்​டர் செய்​யப்​பட்​டுள்​ளார்.

காட்​டி கொடுத்த ‘ஷூ’-வெளி மாநிலத்​துக்கு தப்​பும் திட்​டத்​துடன் 3 பேரும் முதலில் சென்னை விமான நிலை​யத்​துக்கு வந்​துள்​ளனர். போலீஸ் பிடி​யில் சிக்​கி​விடு​வோம் என்ற அச்​சத்​தில் 3 பேரும் உடைகளை மாற்​றி​யுள்​ளனர். ஆனால், ஷூவை மாற்​ற​வில்​லை. கண்​காணிப்பு கேம​ராக்​கள் மூலம் ஏற்​கெனவே அவர்​களது அடை​யாளத்தை உறு​தி​செய்​திருந்த போலீ​ஸாருக்​கு, ஷூதான் அவர்​களை காட்​டிக் கொடுத்​தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.