சென்னை மத்திய அரசின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. மத்திய அரசின் வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது , “வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழும் நாடு நமது இந்திய நாடு. […]
