மலிவான BSNL திட்டம்: 160 நாட்கள்.. தினமும் 2 ஜிபி டேட்டா

BSNL Cheap Recharge Plan: இந்திய அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு பல வித மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனத்திற்கு டக்கர் தரும் வகையில் தற்போது பிஎஸ்என்எல் மக்களை கவரும் விதமாக பல ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனால் தற்போது பிஎஸ்என்எல் அதிக எண்ணிக்கையிலான புதிய வாடிக்கையாளர்களை கவரிந்துள்ளது. ஏனெனில் மக்களை ஈர்ப்பதற்காக, பிஎஸ்என்எல் பல புதிய சலுகைகளைக் கொண்டு வந்துள்ளது. நீங்களும் BSNL வாடிக்கையாளராக இருந்தால், இதோ சிறந்த செய்தி. பிஎஸ்என்எல் தற்போது பட்ஜெட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

BSNL வழங்கும் அற்புதமான ரீசார்ஜ் திட்டம்:
BSNL நிறுவனம் நீண்ட கால வேலிடிட்டி கொண்ட பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சிறந்த வசதிகளை வழங்கி வருகிறது. இதில் சிறப்பு என்னவென்றால் இந்த திட்டத்தின் விலை ரூபாய் 997 ஆகும், மேலும் இதன் வேலிடிட்டி காலம் 160 நாட்களுக்கு வேலிடிட்டி ஆகும். அதாவது, ஐந்து மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வதற்கான கவலையே இல்லை.

ரூபாய் 997 திட்டத்தின் நன்மைகள்:

• நீண்ட கால வேலிடிட்டி: சேவை 160 நாட்களுக்கு இடையூறு இல்லாமல் கிடைக்கும்.
• அன்லிமிடெட் அழைப்பு: அனைத்து நெட்வொர்க்கிலும் இலவச வரம்பற்ற அழைப்புகளை பெறலாம்.
• இலவச SMS: தினமும் 100 SMS ஐ இலவசமாக பெறலாம்.
• இணைய டேட்டா: மொத்தம் 320 ஜிபி அதிவேக டேட்டா, அதாவது ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டா வசதியை பெறலாம்.

குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி மற்றும் சிறந்த சேவையை பெற விரும்பும் பயனர்களுக்கு இந்த 997 திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த ரீசார்ஜ் திட்டம் குறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள தகவல்:

Endless Conversations, Data, and Days Await!

Get ready for 160 days of uninterrupted usage with this perfect recharge!

Unlimited Voice Calls, 2GB Data/Day, 100 SMS/Day: All for just ₹997!

Recharge Now : https://t.co/OlK8NMwIdK#BSNLIndia #BSNLPostpaid pic.twitter.com/sOtMM95dW8

— BSNL India (@BSNLCorporate) March 25, 2025

இந்தப் பயனர்களுக்கு சிறந்த திட்டம்:
இந்தத் திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், BSNL வலைத்தளம், BSNL சுய பராமரிப்பு பயன்பாடு அல்லது PhonePe, Google Pay போன்ற ஆன்லைன் கட்டண பயன்பாடுகள் மூலம் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம். தரவு மற்றும் அழைப்பு வசதிகள் இரண்டையும் வழங்கும் ஒரு வருட செல்லுபடியாகும் திட்டத்தை நீங்கள் விரும்பினால், இந்தத் திட்டம் உங்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கும்.

இதனிடையே சமீபத்தில் தான் பிஎஸ்என்எல் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்த 75,000 புதிய 4ஜி மொபைல் கோபுரங்களை நிறுவியுள்ளது, இது அரசு தொலைத்தொடர்பு சேவையின் இணைப்பை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. அடுத்த சில வாரங்களில் 1 லட்சம் 4G கோபுரங்களை நிறுவும் இலக்கை நிறுவனம் அடையப் போகிறது.இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 4G சேவைகளை தொடங்க BSNL தயாராகி வருகிறது. இதனுடன், நிறுவனம் 5G தொழில்நுட்பத்தையும் சோதிக்கத் தொடங்க உள்ளது. வரும் காலங்களில், பயனர்கள் BSNL இன் 4G மற்றும் 5G சேவைகளை அனுபவிக்க முடியும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.