2025 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பஜாஜ் ஆட்டோவின் டோமினார் 400 பைக் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த பைக்கில் இடம்பெறப் போகின்ற கிளஸ்டர் அமைப்பானது ஏற்கனவே பல்சர் NS400 இஸட் மாடலில் இருப்பதைப் போல அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இதன் மூலம் பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஸ்மார்ட்போன் வாயிலாக இணைக்கும் போது பெற முடியும். குறிப்பாக டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கால் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்டவற்றைப் பெறலாம்.
மற்றபடி, அடிப்படையான மெக்கானிக்கல் வசதிகளில் பெரிதாக எந்த மாற்றங்களும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது. டாமினார் 400 பைக்கில் தொடர்ந்து 373.27cc ஒற்றை சிலிண்டர் லிக்யூடு கூல்டு மோட்டார் பிஎஸ்6 முறையில் அதிகபட்சமாக 40hp பவர், 35 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் பெற்றுள்ளது.
டோமினாரின் 400 மாடலில் 43mm விட்டம் பெற்ற யூ.எஸ்.டி டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றதாக 135 மிமீ பயணிக்கும் திறனை பெற்றுள்ளது. பின்புறத்தில் நைட்ரக்ஸ் மோனோ ஷாக் அப்சார்பர் பெற்றிருக்கலாம்.
2025 பஜாஜ் டோமினார் 400 பைக்கின் விலை ரூ. 2.40 லட்சத்தில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.