பத்ராசலம் நேற்று தெலுங்காiனாவில் ஆரு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். தெலுங்கானாவின் பத்ராசலம் நகரில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆறு மாடிக் கட்டிடம் பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இடிபாடுகளில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும், இன்னும் கட்டிடத்திற்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்து ந்டந்த இடத்தில் மீட்புக் குழுவினர் புல்டோசர்கள் மற்றும் பிற கனரக […]
