CSK vs RCB Playing XI Prediction: ஐபிஎல் தொடரின் 7வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் மீதும் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்புகள் இருந்தாலும், 8வது லீக் போட்டியில் நாளை சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியை தான் கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
CSK vs RCB: 17 வருட ஆதிக்கம்
கடந்தாண்டு சிஎஸ்கேவை தோற்கடித்து பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி அணி நுழைந்தது. பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டி சிஎஸ்கே ரசிகர்களுக்கு நீங்காத வடுவாக இருக்கிறது எனலாம். எனவே, ஆர்சிபி அணியை மீண்டும் தங்களின் கோட்டையிலேயே வென்று சிஎஸ்கே ரசிகர்கள் பழிதீர்க்க காத்திருக்கின்றனர் எனலாம்.
ஆர்சிபி அணியும் கடைசியாக 2008ஆம் ஆண்டில்தான் சேப்பாக்கத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறது. அதன்பின் 17 ஆண்டுகளாக தோல்வியே ஆர்சிபிக்கு சேப்பாக்கத்தில் பரிசாக கிடைத்திருக்கிறது. இந்த சீசனை இரு அணிகளும் வெற்றியுடனே தொடங்கியிருக்கும் நிலையில், இரு அணிகளிலும் பிளேயிங் லெவனை மாற்றுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு எனலாம்.
CSK vs RCB: சிஎஸ்கேவில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
சிஎஸ்கே அணி கடந்த போட்டியில் ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், நூர் அகமது, நாதன் எல்லிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் காம்பினேஷனுடன் சென்றது. எனவே இந்த போட்டியில் எல்லிஸிற்கு பதில் பதிரானா வருவாரா, எல்லிஸ் தொடர்வாரா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. நூர் அகமது, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் 14 லீக் போட்டிகளிலும் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
சாம் கரன்தான் காம்பினேஷனில் பிரச்னையாக இருக்கிறார். அவர் பவர்பிளேவில் மட்டும் பந்துவீசப்போகிறார் என்றால் அவருக்கு பதில் டெவான் கான்வேவை பேட்டிங் ஆர்டரில் சேர்த்துக்கொண்டு, ஹூடாவிற்கு பதில் அன்ஷூல் கம்போஜை சேர்த்துக்கொண்டால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் சமநிலையை பெற்றுவிடும்.
இல்லை, சாம் கரனுக்கு பதில் ஓவர்டனை முயற்சித்து பார்க்கலாம், இருப்பினும் அது சரியான முடிவா என்பது தெரியாது. எனவே, டெவான் கான்வேவை காம்பினேஷனுக்குள் கொண்டுவந்தால் சிஎஸ்கே அணிக்கு பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வீரர்கள் அப்படியே இருந்தால் நலம் என சிஎஸ்கே நினைத்தால், ஹூடாவிற்கு பதில் விஜய் சங்கரை கூட விளையாட வைக்கலாம். ஆனால், இந்த மாற்றங்களை சிஎஸ்கே செய்யுமா என்பது தெரியாது.
CSK vs RCB: ஆர்சிபி அணியில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள்
ஆர்சிபி அணியும் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்களை செய்யாது. ஆர்சிபியில் பில் சால்ட், லியம் லிவிங்ஸ்டன், டிம் டேவிட், ஜாஷ் ஹேஸல்வுட் ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக பிளேயிங் லெவனில் உள்ளனர். இதில் டிம் டேவிட் மட்டுமே கேள்விக்குறியவர். இவர் பெரிய பவுண்டரிகள் கொண்ட, மெதுவான ஆடுகளத்தன்மை கொண்ட சேப்பாக்கத்தில் சிறப்பாக விளையாடுவாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
இந்த சூழலில், அவருக்கு பதில் ஜேக்கப் பெத்தலை டாப் ஆர்டரில் விளையாடிக் கொள்ளலாம். விராட் – சால்ட் ஓபனிங்கில் வந்தால் பெத்தல் நம்பர் 3இல் களமிறக்கலாம். ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன், குர்னால் பாண்டியா என பேட்டர்கள் வரிசையாக இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சுக்கு அதிக சாதகம் இருக்கும் என்பதால் ஆர்சிபி குர்னால் பாண்டியா, சுயாஷ் சர்மா, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் கூடுதலாக ஸ்வப்னில் சிங் அல்லது மோஹித் ரத்தீயை உள்ளே எடுத்து வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
புவனேஷ்வர் குமார் பந்துவீசும் வீடியோக்களையும் பார்க்க முடிகிறது, ஒருவேளை அவர் உடற்தகுதி பெற்றுவிட்டால் ரஷிக் தர் சலாமிற்கு பதில் அவரை அணியில் சேர்க்கலாம். இருப்பினும், புவனேஷ்வர் குமார் பெரியளவில் சோபித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
CSK vs RCB: இரு அணிகளின் பிளேயிங் லெவன் கணிப்பு
சிஎஸ்கே பிளேயிங் லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, தீபக் ஹூடா/விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சாம் குர்ரான், எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, நாதன் எல்லிஸ்/பதிரானா, கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: ராகுல் திரிபாதி
ஆர்சிபி பிளேயிங் லெவன்: விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட்/ஜேக்கப் பெத்தல், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம்/புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள். இம்பாக்ட் வீரர்: தேவ்தத் படிக்கல்/ஸ்வப்னீல் சிங்
மேலும் படிக்க | டெல்லி அணியில் இணையும் கே. எல். ராகுல்.. எந்த போட்டியில்?