`மூக்குத்தி அம்மன் 2′ திரைப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தொடர்ந்து இந்த இரண்டாம் பாகத்திலும் அம்மனாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். இவரை தாண்டி மீனா, ரெஜினா ஆகியோரும் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் பூஜையும் பிரமாண்டமான முறையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது.

அந்தப் பூஜையே அப்போது கோடாம்பாக்கம் வட்டாரத்தில் பேசு பொருளாகவும் ஆனது. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் தொடர்பாகவும் , நயன்தாரா பற்றியும் சமூக வலைதளப் பக்கங்களில் பல தகவல்கள் பேசப்பட்டது.
அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நடிகை குஷ்பு போட்டிருந்த சமூக வலைதளப் பதிவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர், “ `மூக்குத்தி அம்மன் 2′ திரைப்படத்தைப் பற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகிறது. திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நல்லபடியாக நடந்துக் கொண்டிருக்கிறது.
சுந்தரி.சி, நான்சென்ஸான நபர் கிடையாது என அனைவருக்கும் தெரியும். நயன்தாரா தேர்ந்த நடிகர். அவர் அனைத்திற்கும் தகுதியானவர் என் நிரூபித்திருக்கிறார்.

அவர் முன்பு நடித்திருந்த அதே கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இந்த வதந்திகளெல்லாம் திருஷ்டி எடுத்தது மாதிரிதான்.
நடப்பது எல்லாம் நன்மைக்கே நடக்கும். என்டர்டெயின்மென்ட் கிங்கின் அடுத்த பிளாக்பஸ்டரை நோக்கி காத்திருங்கள்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
