IPL SRH vs LSG Today Match Prediction : ஐபிஎல் 2025 தொடர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தினம்தோறும் நடக்கும் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து கொண்டிருகிகறது. அந்தவகையில் இன்றைய போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி ரன் மழைக்கு சொர்க்க பூமியாக திகழும் ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் சொந்த மைதானமும்கூட. அதனால் இன்றைய ஐபிஎல் போட்டியில் நிச்சயம் ரன்மழை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஏனெறால் இதே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் கிட்டதட்ட 528 ரன்கள் அடிக்கப்பட்டு விட்டது. சன்ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 286 ரன்களும், இரண்டாவது பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 242 ரன்களும் அடித்தன. 40 ஓவர்களும் ஒரே சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக வாணவேடிக்கையோடு நடந்தது அப்போட்டி, முடிவில் சன்ரைசர்ஸ் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்த முறையில் ஐபிஎல் தொடரில் 300 ரன்கள் அடிப்பது தான் எங்களுடைய டார்கெட் என்றார். அவரின் இந்த ஆசை கடந்த போட்டியில் கிட்டதட்ட அருகில் வந்துவிட்டது.
அதுவும் முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை விளாசி பிரம்மிக்க வைத்தது. அப்படி இருக்கையில் அதே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது சன்ரைசர்ஸ் அணி. முதல் போட்டியில் வெற்றி பெற்ற தெம்புடன் இருக்கும் அந்த அணி, இன்றைய போட்டியிலும் வாணவேடிக்கை காட்டும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அதேநேரத்தில் முதல் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான தோல்வியை சந்தித்திருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இப்போட்டியில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறது. அந்த அணியின் ஆசை நிறைவேறுமா? அல்லது சன்ரைசர்ஸ் அணியின் ஆசை நிறைவேறுமா? என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு சரியாக தொடங்கும். ஏழு மணிக்கு டாஸ் போடப்படும்.
இரு அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன் :
சன்ரைசர்ஸ் அணி பிளேயிங் லெவன் : டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பிளேயிங் லெவன் : ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், மணிமாறன் சித்தார்த்
*லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்புள்ளது.