வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், எந்த நாடு அமெரிக்காவின் மீது அதிக வரி விதிக்கிறதோ, அந்த நாட்டின் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
அமெரிக்க பொருள்களின் மீது இந்தியாவும் அதிக வரிகளை விதித்து வருகிறது. ஆக, இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் அடங்கும்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வெளியாகி உள்ள அறிக்கையினால், இந்தியாவிற்கு இன்னமும் வரி சுமை கூறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா!
அந்த அறிக்கையில், அமெரிக்காவில் அதிகம் புழங்கும் ஃபென்டனில் என்ற போதை பொருள் சப்ளையில் சீனாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தரவுகளின் படி, கடந்த அக்டோபர் மாதத்திற்கு முன்னாளான 12 மாதங்களில், இந்தப் போதை மருந்தால் 52,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதன்முறையாக…
போதை மருந்து அமெரிக்காவிற்குள் வருவதற்கு சீனா காரணம் என்று அந்த நாட்டின் மீது கூடுதலாக 10 சதவிகித வரி விதிக்கும் உத்தரவில் தான் பதவியேற்ற முதல் நாளிலேயே கையெழுத்திட்டிருந்தார் ட்ரம்ப்.

இப்போது, ஃபென்டனில் போதை மருந்து கடத்தலில் முதன்முதலாக இந்தியாவின் பெயரை உச்சரித்துள்ளது அமெரிக்கா.
ட்ரம்ப் கூறிய பரஸ்பர வரி இன்னும் ஒரு சில நாள்களில் வரவிருக்கும் பட்சத்தில், இன்னும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது அமெரிக்க வரி அதிகாரிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர். அவர்களுடன் வரி குறைப்பு சம்பந்தமாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
