உயர் நீதிமன்றம், மத்திய தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

மதுரை: சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு 269 மத்திய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் மத்திய அரசு சார்பில் ஆஜராகும் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்கள், மத்திய அரசு வழக்கறிஞர்கள், தனி வழக்கறிஞர்களை நியமனம் செய்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஜெ.மதனகோபால்ராவ், டி.வி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.சவுந்தரராஜன், ஜெ.பிரிசில்லாபாண்டியன், ஏ.அஸ்வத்தாமன், கோபிகா நாம்பியார் உட்பட 67 பேர் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்களாகவும், பூனம்சோப்ரா, கே.பாலாஜி. கே.கங்காதரன், எம்.பி.ஜெய்ஷா உட்பட 94 பேர் மத்திய அரசு வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வி.வணங்காமுடி, என்.ஜெயகுமார், டி.கேசவன், ஆர்.நந்தகுமார், எம்.காத்திக்கேய வெங்கடாச்சலபதி, ஜி.தாழைமுத்தரசு, ஜெ.அழகுராம்ஜோதி, எம்.கருணாநிதி, ஏ.ராஜாராம், ஆர்.எம்.மகேஷ்குமாரவேல், கே.கோகுல், எச்.வேலவதாஸ், பி.சுப்பையா, ஏ.பி.ராஜசிம்மன், வி.மலையேந்திரன், கே.பி.கிருஷ்ணதாஸ் உட்பட 37 பேர் மத்திய அரசு மூத்த வழக்கறிஞர்களாவுகம், வி.முரளிகணேஷ், டி.மகேந்திரன், எம்.டி.பூர்ணாச்சாரி, ஆர்.சரவணகுமார், பி.பிரிஜேஷ்குமார், ஆர்.கெளரிசங்கர், ஆர்.எம்.அருண்சுவாமிநாதன், ஜி.மூவேந்திரன் உட்பட 52 பேர் மத்திய அரசு வழக்கறிஞர்களாகவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை கிளைக்கு 19 மத்திய அரசு வழக்கறிஞர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.