மேஷம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மேஷத்துக்கு ஏழரைச் சனி ஆரம்பம். ஆனாலும் மாறுபட்ட சிந்தனையால் சாதிக்கவைப்பார் சனி பகவான். செலவுகள் சுபச்செலவுகளாகும். வீட்டிலும் பணியிலும் பொறுப்புகள் அதிகரிக்கும்! முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 மேஷம் : `தொடங்கும் ஏழரை சனி’ – என்னென்ன நடக்கும்?

ரிஷபம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். ரிஷபத்துக்கு லாப ஸ்தானமாகிய 11-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். பல விஷயங்கள் நல்லபடியாக மாறி நன்மைகள் பெருகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 ரிஷபம் : `திடீர் அதிர்ஷ்டம்; வி.ஐ.பி அறிமுகம்’ – ஆதாயம் உண்டா?
மிதுனம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மிதுன ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எதிர்பாராத அனுகூலம், செல்வாக்கு கூடிவரும். எனினும், வியாபாரம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் தெளிவோடு முடிவெடுக்க வேண்டிய காலம் இது. முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 மிதுனம் : `எப்போது தொழில் தொடங்கலாம்?’ – வாய்ப்புகள் என்னென்ன?

கடகம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கடக ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். அஷ்டமத்துச் சனி விலகப்போகிறது; இனி, உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கி நன்மைகள் அனைத்தும் நடக்கும். சாதிக்கும் நம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். முழுமையாகப் படிக்க…
சனிப்பெயர்ச்சி 2025 கடகம் : `வரப்போகும் நல்ல செய்தி’ – இனி எப்படி இருக்கப்போகிறது?
சிம்மம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். சிம்ம ராசிக்கு 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். `அஷ்டமத்துச் சனி கஷ்டம் தருமே’ என்று கலங்கவேண்டாம். எல்லா விஷயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டால், எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 சிம்மம் : புதியவர்களிடம் கவனம்; ஆரோக்கியத்தில் அக்கறை – என்ன பலன்கள் உங்களுக்கு?
கன்னி:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, கண்டகச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்தக் காலத்தில் வழக்குகள் சாதகமாகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும். எனினும், எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 கன்னி: பயம் தேவையில்லை; ஆனால், கவனம்… – எப்படியிருக்கும் பெயர்ச்சி?

துலாம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். துலாம் ராசிக்கு 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் ராசியே முதலிடத்தில் உள்ளது. முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 துலாம்: வெற்றி உங்கள் பக்கம் – எதில் கவனமாக இருக்க வேண்டும்?
விருச்சிகம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். விருச்சிக ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில், உங்களுக்கு ஓரளவு பணவரவு உண்டாகும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 விருச்சிகம் : பணம் வரும்; ஆனால் இது முக்கியம் – என்னனென்ன பலன்கள் உங்களுக்கு?

தனுசு்
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். சில விஷயங்களிலும் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எனினும் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 தனுசு : `நிதானம்… கவனம்… சாதகம்’ – என்னென்ன காத்திருக்கிறது?
மகரம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மகர ராசிக்கு 3-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். இனி, வரும் காலம் உங்களுக்குப் பொற்காலம் எனலாம். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். முழுமையாகப் படிக்க..
சனிப்பெயர்ச்சி 2025 மகரம் : `தொட்டதெல்லாம் துலங்கும்’ – கவனமாக இருக்கவேண்டிய சில விஷயங்கள் எவை?

கும்பம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கும்ப ராசிக்கு 2-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். நீங்கள் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் விலகப்போகின்றன. குறிப்பாக, சதயம், பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள் மனப் பாரம் நீங்கி, பூரண சந்தோஷம் பெறுவார்கள். முழுமையாகப் படிக்க…
சனிப்பெயர்ச்சி 2025 கும்பம்: சனி விலக, மாற்றம் வருமா? கொஞ்சம் கவனம் தேவை
மீனம்:
கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மீன ராசிக்கு ஜென்மச் சனியாய் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஆகவே, ஒருவித பதற்றம் உங்களை ஆட்கொள்ளலாம். கவலை வேண்டாம். தெய்வத்துணை உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது! முழுமையாகப் படிக்க…
சனிப்பெயர்ச்சி 2025 மீனம் : ஜென்மச் சனி என்ன செய்யும்? – சிக்கலற்ற விஷயங்கள் இவைதான்