புதுடெல்லி,
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் அதிபர் கேப்ரியல் போரிக் பான்ட் 5 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று கேப்ரியல் போரிக் பான்ட் வருகிற 1-ந் தேதி இந்தியா வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிபர் போரிக்கின் இந்த பயணம், இருதரப்பு உறவுகள் பற்றிய விரிவான மறுபரிசீலனையை மேற்கொள்வதற்கும், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் தலைவர்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த பயணத்தின்போது அதிபர் போரிக் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவார். அதோடு ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் அவர் சந்தித்து பேசுவார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.