டெல்லி ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல விதித்துள்ள கட்டுப்பாடு எதிர்ப்பு மனுவை ஏற்க உச்சநீதிமன்ரம் மறுத்துள்ளது. கோடை விடுமுறை நாட்களில் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. எனவே, மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைவதால் தங்களின் ஓட்டல் தொழில் பாதிக்கப்படுவதாக தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் […]
