சொதப்பிய சிஎஸ்கே… 17 வருடங்களுக்கு பிறகு சென்னையில் வெற்றி பெற்ற ஆர்சிபி!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பெற்று இருந்தது. மறுபுறம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெற்றிருந்தது. இரண்டு அணிகளும் தங்களது முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்திருந்ததால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. டாஸ் வென்ற ருதுராஜ் கைகுவாட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாடாத பத்திரனா இந்த போட்டியில் இடம் பிடித்தார். பெங்களூரில் புவனேஸ்வர் குமார் இந்த போட்டியில் விளையாடினார்.

ஆர்சிபி பேட்டிங்

டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். ஆர்சிபி அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது. பில் சால்ட் சென்னை அணியின் பவுலர்களை துவம்சம் செய்தார். 16 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 32 ரன்கள் அடித்தார். பின்னர் நூர் அகமது பந்தில் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு இறங்கிய படிக்கல் 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்த நிலையில், அஸ்வின் பந்தில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதார் சிறப்பாக விளையாடிய ரன்களை சேர்த்தனர்.

விராட் கோலி 31 ரன்களில் வெளியேற, மறுபுறம் ரஜத் பட்டிதார் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 32 பந்திகளில் மூன்று சிக்ஸர்கள், நான்கு பவுண்டரிகள் உட்பட 51 ரன்கள் அடித்து இமாலை இலக்கை அடைய உதவினார். கடைசி ஓவரில் டிம் டேவிட் மூன்று சிக்ஸர்கள் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் அடித்தது. சென்னை அணி தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்களையும், மதீசா பத்திரனா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

சென்னை அணி சேசிங்

197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே இரண்டு அதிர்ச்சி காத்திருந்தது. ஹேசில்வுட் பந்தில் ராகுல் திருப்பாதி 5 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் அதே ஓவரில் 0 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்தடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்த நிலையில், பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடா மற்றும் சாம் கர்ரன் 4 மற்றும் 8 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். 52 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து சென்னை அணி தடுமாற்றத்தில் இருந்தது. நிதானமாக ஆடிய ரச்சின் ரவீந்திரா மற்றும் சிவம் துபே ஒரே ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இறுதியில் சென்னை அணி இந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.