புதுடெல்லி,
21-வது பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு, போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, 2022-ம் ஆண்டு போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சீனா, 2-வது இடம் பிடித்த தென் கொரியா, 3-வது இடம் பெற்ற ஜப்பான் ஆகிய 4 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.
எஞ்சிய 8 இடங்களை நிர்ணயிக்கும் பெண்கள் ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டி ஜூன் 23-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை பல்வேறு இடங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 34 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர் லெஸ்டே ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ‘பி’ பிரிவு ஆட்டங்கள் தாய்லாந்தில் நடக்கிறது.