iPhone 15 discount: நீங்கள் ஐபோன் வாங்க போறீங்களா? அப்படியானால் இதோ ஒரு சிறந்த செய்தி வெளியாகி இருக்கிறது. நீங்கள் வாங்கப் போகும் ஐபோனில் ஏதேனும் தள்ளுபடி இருக்கா என்கிற தேடலில் இருக்கிறீர்கள் என்றால், தற்போது ஐபோன் 15 இல் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் மிகப்பெரிய தள்ளுபடி தரப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் தற்போது ஐபோன் 15 இன் 512 ஜிபி ஸ்டோரேஜில் சிறந்த சலுகையை வழங்கியுள்ளது.
பொதுவாக இ-காமர்ஸ் தளங்த்தில் சிறப்பு சலுகைகள் பண்டிகை அல்லது சிறப்பு சந்தர்ப்பங்களில் வழங்கப்படும். குறிப்பாக ஸ்மார்ட்போன்ககளில் தள்ளுபடி வழங்கப்படும். ஆனால் இந்த முறை அமேசான் எந்த விற்பனையும் இல்லாமல் ஐபோனின் விலையை வெகுவாகக் குறைத்துள்ளது. ஆம், அமேசான் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் 15 இன் 512 ஜிபி ஸ்டோரேஜில் மிகப் பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால், இந்த ஈ-காமர்ஸ் நிறுவனம் கூடுதல் சலுகையை வழங்குகிறது, இதன் மூலம் நீங்கள் கூடுதல் பணத்தை சேமிக்கலாம்.
ஐபோன் 15 512ஜிபி இன் புதிய விலை:
இப்போது ஐபோன் 15 512ஜிபி விலையில் இருக்கும் மிகப்பெரிய தள்ளுபடியை பற்றி பார்க்கலாம். இந்த போன் அமேசானில் ரூபாய் 1,09,900 க்கு விற்பனையில் உள்ளது. ஆனால் இப்போது இதை மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த ஐபோன் 23% நேரடி தள்ளுபடியுடன் வாங்கலாம். இதன் மூலம் இந்த போனின் விலை வெறும் ₹ 84,999க்கு வாங்கலாம்.
இது தவிர, ஒரு சிறந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்கப்படுகிறது, இதன் மூலம் உங்கள் பழைய போனை ரூபாய் 22,800 வரை எக்ஸ்சேஞ்ச் செய்து ரூபாய் 48,000க்கு வாங்கலாம்.
உங்கள் பட்ஜெட் கொஞ்சம் குறைவாக இருந்தால், கவலைப்படத் தேவையில்லை. இந்த ஐபோனை EMI திட்டம் மூலமும் வாங்கலாம். அதன்படி போனை ரூபாய் 4,121 மாதாந்திர தவணையில் வாங்கலாம். இது தவிர, ஒரு சிறந்த வங்கிச் சலுகையும் வழங்கப்படுகிறது, இதன் மூலம் நீங்கள் ரூபாய் 2,549 வரை கேஷ்பேக் பெறலாம்.
ஐபோன் 15 இன் சிறந்த அம்சங்கள்:
iPhone 15 வண்ணம் நிறைந்த கண்ணாடி மற்றும் அலுமினியம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது நீர் மற்றும் தூசி எதிர்ப்பு (IP68) சான்றிதழைப் பெற்றுள்ளது. 6.1 அங்குல Super Retina XDR OLED டிஸ்பிளே, 1179 x 2556 பிக்சல் தீர்மானத்துடன், வெளிச்சமான வெளிப்பாட்டை வழங்குகிறது. 48MP முதன்மை கேமரா, 24MP மற்றும் 48MP புகைப்படங்களை எடுக்க உதவுகிறது, இது குவாட்-பிக்சல் சென்சார் மற்றும் 100% ஃபோகஸ் பிக்சல்களைக் கொண்டுள்ளது, இதன் காரணமாக புகைப்படங்கள் தரம் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் 4K வீடியோ பதிவு திறனை வழங்குகிறது. 128GB, 256GB மற்றும் 512GB சேமிப்பு விருப்பங்களுடன், 6GB RAM கொண்டது. USB-C போர்ட் மூலம் 15W PD2.0 சார்ஜிங் மற்றும் 480Mb/s வரை தரவு பரிமாற்ற வேகத்தை ஆதரிக்கிறது.