டெல்லி: நாடு முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிவகங்கை எம்.பி.யான கார்த்தி சிதம்பரம் பிரதமர் மோடியை சந்தித்து மனு அளித்தார். இது அரசியல் களத்தில், தலைவர்களின் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. “தெருநாய் அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய பணிக் குழு தேவை” பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் எம்.பி. நேரரில் முறையிட்டார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று (நேற்று) பிரதமரை அவரது நாடாளுமன்ற […]
