லண்டன்,
இங்கிலாந்து நாட்டின் மன்னர் சார்லஸ் (வயது 76). கடந்த ஆண்டு இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புற்றுநோயின் பாதிப்பு தீவிரமடைந்தது.
எனவே பரிசோதனைக்காக அவர் தலைநகர் லண்டனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் கலந்து கொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற பரிசோதனைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். எனினும் தொடர்ந்து அவர் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
முன்னதாக இதே ஆஸ்பத்திரியில் சார்லசின் மருமகளும், இளவரசியுமான கேத்துக்கு கடந்த வாரம் இங்கு ஆபரேசன் நடைபெற்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பொதுப்பணியில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.