கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், மொத்தமாக அணிகளின் வீரர்கள் மாறி உள்ளனர். கேப்டனாக இருந்தவர்களே வேறு அணிகளுக்கு மாறி உள்ளதால், ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது. அனைத்து அணிகளும் தங்களது முதல் சுற்று போட்டியை முடித்துள்ள நிலையில் இரண்டாம் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது.
மேலும் படிங்க: கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாகும் 35 ரொமாண்டிக் ஹீரோ! யார் தெரியுமா?
புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது. இரண்டாவது இடத்தில் லக்னோ அணியும் மூன்றாவது இடத்தில் பஞ்சாப் அணியும், நான்காவது இடத்தில் டெல்லி அணியும் உள்ளன.
அதேபோல் மீதமுள்ள 6 இடங்களில் முறையே ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் உள்ளன. இதில், பெங்களூரு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் மட்டுமே தற்போது வரை இரண்டு போட்டிகள் விளையாடி உள்ளன. இச்சூழலில் இன்று தங்களது இரண்டாவது லீக் சுற்றில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.
இர்பான் பதான் கணிப்பு
இந்த நிலையில், இந்த தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து பல முன்னாள் வீரர்கள் கணித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ள 4 அணிகள் குறித்து கணித்து உள்ளார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என இர்பான் பதான் கணித்துள்ளார்.
எந்தெந்த அணிகள் கோப்பை வென்றுள்ளது
இதுவரை நடந்துள்ள 17 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா 5 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 1 முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் படிங்க: கமல் பெயரில் மோசடி? ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!