புதுடெல்லி,
வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பது, ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு ஏ.டி.எம். எந்திரத்தை ஒரு மாதத்துக்கு 5 முறை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் ஏ.டி.எம்-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும்.
அதன்படி இதுவரை இலவச பரிவர்த்தனை வரம்பை முடித்த பிறகு, மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தலா ரூ.21-ஐ கட்டணமாக வங்கிகள் வசூலித்து வந்தன. தற்போது இந்த கட்டணம் ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு மே மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.