சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுகிறது திமுக அரசு என்றும், வன்கொடுமை வழக்குகள் இந்தாண்டு 6% குறைந்துள்ளன என்றும் என ஆதி திராவிடர், பழங்குடியினர் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் மாநில அளவிலான விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு‘ கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி. செழியன், […]
