சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

18வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இச்சூழலில் இந்த ஐபிஎல் தொடர் நடக்கும் 13 மைதானங்களில் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

நேற்றைய (மார்ச் 28) போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான பிளமிங், சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு ஆடுகளமே காரணம் என்றும் என்றும் ஆடுகளத்தை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றும் கூறி இருந்தார். இது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

மேலும் படிங்க:இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

பொதுவாக ஒவ்வொரு அணியும் தங்களது சொந்த மைதானத்தை எப்படி தயார் செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்துவார்கள். அதன்படியே ஆடுகளத்தையும் தயார் செய்வார்கள். இதனால் ஒவ்வொரு அணிக்கும் தங்களது சொந்த மைதானம் என்றால் ஒரு அன்வாண்டேஜ் இருக்கும். அதன் காரணமாக அவர்கள் சிறப்பாகவும் விளையாடுவார்கள். இந்த நிலையில், ஆடுகளத்தை பரமரிக்கும் பணியை முழுவதுமாக பிசிசிஐ தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

முக்கால்வாசி மைதானங்களை பேட்டிங்கிற்கு சாதகமாக தயார் செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்க மைதானத்தையும் மாற்றி அமைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதம் செய்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்விக்கு ஆடுகளமே காரணம் என்றும் வழக்கத்தை போல ஆடுகளம் இருந்திருந்தால், சென்னை அணி வெற்றி பெற்றிருக்கும் என்றும் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிங்க: ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.