சென்னை: திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசுகிறார் விஜய். திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி என தவெக பொதுக்குழுவில் திமுகவை விமர்சித்த நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார். “திமுகவின் எதிரி யார் என்றுதான், மற்றக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது” என கூறினார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் […]
