மியான்மார் நிலநடுக்கம் எதிரொலி; தாய்லாந்து பயணம் பாதுகாப்பானதா? வெளியுறவுத் துறை சொல்வது என்ன?

மியான்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, 6 பகுதிகளைப் பேரிடர் பகுதி என்று ராணுவ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தாய்லாந்து நாட்டிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மியான்மார் அவசரக்கால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன் விரகுல், எந்த அவசரக்கால நிலையும் அறிவிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

தாய்லாந்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால், அண்டை நாடான லாவோஸ், வங்கதேசம், சீனாவின் யுன்னான், குவாங்சி மாகாணங்கள், வடக்கு வியட்நாம் மற்றும் மேற்கு மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசியா முழுவதும் அதிர்வு ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்தின் வடக்கே உள்ள சியாங் ராய் நகரிலும், வடக்கு நகரமான சியாங் மாய் நகரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதன் பின்னர் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டு விமான நிலையம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

மக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது நிலநடுக்கம் காரணமாகத் தாய்லாந்திற்குப் பயணம் செய்வது குறித்து இந்திய வெளியுறவு அலுவலகம் எந்த அவசர ஆலோசனையும் வெளியிடவில்லை.

நீங்கள் தாய்லாந்திலிருந்து அவசர உதவி தேவைப்பட்டால், பாங்காக்கில் உள்ள தூதரகத்தைத் தொடர்பு கொள்ள வெளியுறவு அலுவலகம் பரிந்துரைக்கிறது.

உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையையும், உள்ளூர் ஊடகங்களையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சுற்றுலா நிறுவனத்திடம் உங்கள் பயணத்தை முன்பதிவு செய்திருந்தால், அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.