18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 29) 9வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில்லும், சாய் சுதர்சனும் களம் இறங்கினர். இந்த கூட்டணி குஜராத் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. 8.3 ஓவர்களில் 78 ரன்கள் எடுத்திருந்த போது சுப்மன் கில் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?
அவரை தொடர்ந்து களத்திற்கு வந்த ஜோஸ் பட்லரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 5 ஃபோர்கள் 1 சிக்சர் என 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் வீரர்கள் ஆட்டமிழந்தாலும், மறுபக்கம் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி அரை சதத்தை கடந்தார். அவர் 63 ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 196 ரன்கள் எடுத்தது.
197 ரன்கள் இலக்கு
இதனைத் தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களம் இறங்கியது. ஆனால் எதிர்பார்த்த தொடக்கம் அந்த அணிக்கு கிடைக்கவில்லை. முதல் ஓவரிலேயே 2 ஃபோர்கள் அடித்து 8 ரன்களுடன் வெளியேறினார் ரோகித் சர்மா. அவரை தொடர்ந்து ரியான் ரிகில்டன் 6 ரன்களில் வெளியேற, திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறுதி நேரம் கிரீஸில் தாக்குப்பிடித்தனர். சிறப்பாக விளையாடி விக்கெட்களை காத்த இந்த இவர்களை பிரசித் கிருஷ்னா பிரித்தார். திலக் வர்மா 39 ரன்களில் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து அடுத்தடுத்த வீரர்கள் வெளியேறினர்.
குஜராத்துக்கு முதல் வெற்றி
மும்பை அணி தோல்வியை நோக்கி பயணிக்க ஆராம்பித்தது. சூர்யகுமார் யாதவ் 48, ராபின் மின்ஸ் 3, ஹர்திக் பாண்டியா 11 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குஜராத் அணி சார்பாக முகமது சிராஜ் 2 விக்கெட்களையும் பிரசித் கிருஷ்னா 2 விக்கெட்களையும் கைபற்றினர்.
மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்