ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

ஐபிஎல் தொடர் இந்தியாவின் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 25ஆம் தேதி ஐபிஎல் பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த இந்த தொடரில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம், ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி சமீபத்திய டெஸ்ட் தொடர்களை இழந்துள்ளது.

மேலும் படிங்க: சேப்பாக்கம் எங்களுக்கு ஹோம் கிரவுண்டே இல்லை – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்மிங்

தொடர் தோல்விகள்

இந்திய மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா இழந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இந்திய அணியின் கேப்டன்சியில் மாற்றம் வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக அடித்து இருந்தார். அதன் பிறகு நடைபெற்ற ரஞ்சித் தொடரிலும் ரோஹித் சர்மா பெரிதாக ரன்கள் அடிக்க வில்லை. எனவே ரோகித் சர்மாவுக்கு பதில் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் தொடர்களில் பும்ரா தான் கேப்டனாக செயல்பட்டார்.

ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி இங்கிலாந்து தொடரிலும் ரோகித் சர்மா தான் கேப்டனாக தொடர்வார் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்து தொடரில் ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடிய வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து தொடருக்கான அணி ஐபிஎல் பைனல் முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்றும், இந்த ஐபிஎல் தொடரில் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை இங்கிலாந்து தொடருக்கு எடுக்கலாமா என்ற பேச்சு வார்த்தையும் நிலவி வருகிறது.

மேலும் படிங்க: CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு இவர்கள்தான் காரணம்? புலம்பும் ரசிகர்கள்!

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.