84 நாட்களுக்கு வழங்கப்படும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களின் விவரம்

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் வோடபோன் ஐடியா (vi), ஜியோ (Jio), ஏர்டெல்(Airtel) உள்ளிட்ட நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் போட்ட போட்டி போட்டுக் கொண்டு பல புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். நீங்கள் உங்களது போனில் ஜியோ, ஏர்டெல் அல்லது VI சிம் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இதோ ஒரு பயனுள்ள செய்தி.

இந்த மூன்று தனியார் நிறுவனங்களும் தங்கள் பயனர்களுக்கு பல சிறந்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக மாதாந்திர திட்டங்களை தொடர்ந்து ரீசார்ஜ் செய்வதற்கு பதிலாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தற்போது 84 நாள் வேலிடிட்டியுடன் வரக்கூடிய திட்டத்தை கொண்டுள்ளது. அந்த திட்டதைப்ப் பற்றி இப்போது காண்போம்.

ஜியோவின் 84 நாள் திட்டம்:
ஜியோ தற்போது நீண்ட நாட்கள் வேலிடிட்டி திட்டத்தின் விலையை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜியோ பல திட்டங்களில் 84 நாட்கள் நீண்ட செல்லுபடியை வழங்குகிறது. அதன்படி இதில் மலிவான 84 நாள் கொண்ட திட்டத்தைப் பற்றி பேசுகையில், அதன் விலை ரூபாய் 799 ஆகும். இந்த ஜியோ 799 பிளான் (Jio 799 Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை அணைத்து நெட்வொர்க்கிற்கும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் லோக்கல், STD மற்றும் இலவச ரோமிங் வசதி சேவைகளை வழங்குகிறகு. இந்த திட்டம் தினசரி 1.5GB டேட்டா நன்மையோடு வருகிறது. இந்த ஜியோ 799 திட்டம் மொத்தமாக 126GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் இந்த திட்டம் தினசரி 100 SMS நன்மையையும் வழங்குகிறது. இது தவிர,இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் சேவை போன்ற இலவச நன்மைகளையும் பெறலாம். தினசரி 1.5GB டேட்டா, அதுவும் , 3 மாதங்களுக்கு எந்த தடையுமின்றி குறைந்த செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை வேண்டும் என்றால், இந்த திட்டம் சிறப்பானது.

ஏர்டெல்லின் 84 நாள் திட்டம்:
ஏர்டெல்லின் பல திட்டங்கள் 84 நாட்கள் நீண்ட செல்லுபடியை வழங்குகின்றன. ஆனால் மலிவான விலை ரூ.859 திட்டமாகும். இதில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதன்படி மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகையும் வழங்கப்படும். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், ரிவார்ட்ஸ்மினி சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

Vi இன் 84 நாள் ரீசார்ஜ் திட்டம்:
வோடபோன் ஐடியாவின் மலிவான 84 நாள் ரீசார்ஜ் திட்டம் ரூ.979க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் வசதியைப் பெறுகிறார்கள். இந்த திட்டத்தில் ViMTV (16 OTT) சந்தா, அரை நாள் அன்லிமிடெட் டேட்டா, வார இறுதி டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் திட்டப்படி, கூடுதல் கட்டணம் இல்லாமல், ஒவ்வொரு மாதமும் 2GB வரை காப்புப் பிரதி தரவு போன்ற நன்மைகள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.