ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், விளையாடிய இரண்டு போட்டிகளிலுமே வெற்றி பெற்று பெங்களூரு அணி முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று நடைபெற இருக்கும் 9வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி குஜராத் டைட்டன்ஸ் அணியின் சொந்த மைதானமான, அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
இரு அணிகளின் பலம் & பலவீணம் என்ன?
குஜராத் டைட்டன்ஸ்: குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று தனது இரண்டாவது போட்டியை விளையாட இருக்கிறது. முதல் போட்டியில் குஜராத் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது. அப்போட்டியில் 243 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்திய குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இச்சூழலில் தங்களது முதல் வெற்றியை நோக்கி அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
குஜராத் அணியை பொருத்தவரையில் பேட்டிங்கில் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர் ஆகியோ பலமாக இருக்கின்றனர். அதேபோல் பந்து வீச்சில் சாய் கிஷோர், ரசித் கான், ரபாடா, சிராஜ் என பலமாக இருந்தாலும்,. அந்த அணியில் நல்ல ஃபினிஷர் இல்லை என்பது பலவீணமாக பார்க்கப்படுகிறது. ஃபினிஷிங் இடத்தில் சாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் ஆகியோர் இருந்தாலும், கடந்த போட்டியில் அவர்களால் வெற்றியை அணிக்கு தேடி தர முடியவில்லை.
கடந்த போட்டியில் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் சிறப்பாக விளையாடினாலும், 16, 17வது ஓவர்களில் ஃபவுண்டரிகளை அடிக்க தவறினார். இது அந்த அணியின் தோல்விக்கு ஓர் முக்கிய காரணம். எனவே அந்த இடத்தில் அவர்கள் பலமாக இருக்கும்பட்சத்தில் இப்போட்டியில் அவர்கள் வெற்றி பெற முடியும்.
மேலும் படிங்க: CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு இவர்கள்தான் காரணம்? புலம்பும் ரசிகர்கள்!
மும்பை இந்தியன்ஸ்: மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதி தோல்வி அடைந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை தொடங்குகிறது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வென்று 13 ஆண்டுகள் ஆகின்றன. இத்தொடரிலும் அது தொடர்கிறது. இச்சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
இப்போட்டியில் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாட இருக்கிறார். அவர் முதல் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் பலமாக இருக்கிறது. ஃபினிஷிங் இடத்திலும் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளார். அதேபோல் பந்து வீச்சிலும் போல்ட், தீபக் சஹார் ஆகியோர் இருந்தாலும், பும்ரா இல்லாதது அந்த அணியில் பலவீணமாக பார்க்கப்படுகிறது. அதனை சரிகட்ட போல்ட் நன்றாக பந்து வீச வேண்டும். அப்படி வீசி பவர் பிளேவில் விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் அந்த அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
மைதானம் எப்படி?
அகமதாபாத்தில் ஒரு வெப்பமான நாள் எதிர்பார்க்கப்படுகிறது, அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் இருக்கும், ஆனால் போட்டியின் போது வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை எதிர்பார்க்கப்படவில்லை, ஆனால் பனிப்பொழிவு மைதானத்தை – தொடங்குவதற்கு தட்டையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கிற்கு சிறப்பாக இருக்கும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. கடந்த போட்டியில் பஞ்சாப் அணி 243 ரன்கள் அடித்தது. எனவே இப்போட்டியிலும் பெரிய ஸ்கோரை இலக்காக வைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த மைதானத்தில் நடந்த 8 போட்டியிகளில் 6 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்தே அணியே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
2023 ஆம் ஆண்டு நடந்த குவாலிஃபையர் 2 உட்பட, அந்த மைதானத்தில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது குஜராத் அணி. இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி உள்ள நிலையில், குஜராத் அணி 3 போட்டிகளிலும், மும்பை அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
போட்டி நேரம் மற்றும் ஸ்ட்ரீமிங்
மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இடையிலான போட்டி இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு போட்டி தொடங்கும். இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து ரசிகலாம்.
இரு அணிகளுக்கான உத்தேச பிளேயிங் 11
குஜராத் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் (Impact Player), வாஷிங்டன் சுந்தர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், ஆர் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
மும்பை அணி: ரியான் ரிக்கல்டன் (வாரம்), ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (சி), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்தியநாராயண ராஜு விக்னேஷ் புதூர் (Impact Player).
மேலும் படிங்க: சேப்பாக்கம் எங்களுக்கு ஹோம் கிரவுண்டே இல்லை – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளம்மிங்