ஐபிஎல் கோப்பை இந்த முறை ஆர்சிபி அணிக்கு தான் – தினேஷ் கார்த்திக் சொன்ன முக்கிய பாயிண்ட்

Dinesh Karthik RCB: ஐபிஎல் 2025 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அந்த அணி, இந்த ஆண்டில் கோப்பையை வெல்லப்போகும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை அந்த அணி  விளையாடிய இரண்டு போட்டிகளையும் பார்க்கும்போது இதுவரை நடைபெற்ற சீசன்களில் அந்த அணி விளையாடியதில் இருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பீல்டிங்கின்போது வழக்கமாக அந்த அணி காட்டும் ஆக்ரோஷம் எல்லாம் ஆர்சிபி அணியினர் வெளிப்படுத்துவதில்லை. மாறாக அதனை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டுமே வெளிப்படுத்துகின்றனர்.

யாருடைய விக்கெட்டை எடுத்தாலும் பெரிதாக ரியாக்ட் செய்வதில்லை. சில இடங்களில் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாலும், கடந்த சீசன்களில் காட்டிய ஓவர் ரியாக்ஷன் எல்லாம் இந்த சீசனில் இதுவரை வெளிப்படவில்லை. அதனால் ஆர்சிபி அணியின் அணுகுமுறை மாற்றத்தை பலரும் குறிப்பிட்டு சொல்லி வருகின்றனர். இந்த சூழலில்  ஐபிஎல்  2025 தொடரை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகவும் ஆர்சிபி அணி உறுதியாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் இப்படி கணிக்கப்படுவது இயல்பு தான் என்றாலும், இந்த முறை ஒரு பாசிடிவ் பீலிங் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மீது உருவாகியுள்ளது. 17 ஆண்டுகளாக முதல் கோப்பைக்காக காத்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இம்முறை கோப்பையை சாம்பியன் கோப்பை வெல்ல வாய்ப்புள்ளது என்பதற்கு அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் தெரவித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு பேசிய தினேஷ் கார்த்திக், ஆர்சிபி அணி ஒரு யூனிட்டாக சிறப்பாக இருப்பதாக கூறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தரமான பவுலர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை எதிர்கொள்ள எங்களிடம் தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் நிச்சயம் எந்த அணிக்கும் சவால் அளிக்க முடியும். அதனால் நல்ல முடிவே கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்திருந்தார். அவர் கூறியதுபோலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அந்த அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. 

சிஎஸ்கே போட்டிக்குப் பிறகு பேசிய தினேஷ் கார்த்திக், சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சி. இது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கிறேன். நாங்கள் சிறப்பான அணியாக இருக்கிறோம். இதற்காக கடந்த சில மாதங்களாக உழைப்பை போட்டிருக்கிறோம். ஆர்சிபி அணி எந்த சூழலையும் எதிர்கொள்ள எப்போதும் தயாராகவே இருக்கிறது. முதல் இரு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இது ஒரு பாசிட்டிவான அணுகுமுறையாக பார்க்கிறோம்.  வரும் போட்டிகளிலும் இதேபோன்ற முடிவுகளையே எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்த பேட்டி பலராலும் பாராட்டப்பட்டுள்ளதுடன், ஆர்சிபி அணி இம்முறை கோப்பையை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கூறுகின்றனர், 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

மேலும் படிங்க: இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.