‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ – கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT-ஐ திணற வைத்த நெட்டிசன்கள்!

கிபிலி பாணி ஓவியங்களால் ChatGPT சர்வரையே நெட்டிசன்கள் திணற வைத்துள்ள நிலையில் ‘சர்வர் தாங்காது; சும்மா இருங்க’ என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் நீக்கமற பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி வீட்டின் செல்லப் பிராணி படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். ChatGPTயின் GPT 4o வெர்சன் ஏஐ ஜெனரேட்டர் இந்த கிபிலி பாணி படங்களை நொடிப் பொழுதில் ஜெனரேட் செய்து தருவதால் அது பலருக்கும் பொழுதுபோக்காக மாறியுள்ளது. இந்த அம்சத்தை பிரீமியம் செலுத்தியே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கவே ஃப்ரீ யூஸர்ஸுக்கும் இந்த சேவையை நீட்டிதது ஓபன் ஏஐ.

இந்நிலையில் ஓப்ன ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மான் எக்ஸ் ப்க்கத்தில் பகிர்ந்த பதிவில், “நீங்கள் எல்லோரும் கிபிலி படங்களை ஜெனரேட் செய்வதை கொஞ்சம் நிறுத்துவீர்கள். எங்கள் குழுவினருக்கு தூக்கம் தேவை.” எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே அவர் இந்த வாரத் தொடக்கத்திலேயே ChatGPT சர்வர்கள் ஓவர் லோட் ஆவதால் இந்த சேவையை வழங்குவதில் கட்டுப்பாடுகளைக் கொண்டுவரப் போவதாகக் கூறியிருந்தார். இந்நிலையில், நெட்டிசன்கள் கிபிலி பாணி படங்களை ஜெனரேட் செய்வதை சற்றே நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டியுள்ளார்.

முன்னதாக சாம் ஆல்ட்மேன், “ChatGPT ஜெனரேட் செய்த படங்களுக்கு பயனர்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்ப்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் எங்கள் GPU-கள் உருகி வருகின்றன. அதனை சரி செய்யும் பணியில் இறங்கியுள்ளோம். அதுவரை தற்காலிகமாக சில கட்டண வரம்புகளை அறிமுகப்படுத்தப் போகிறோம். இது நீண்ட காலம் நீடிக்காது என்று நம்புகிறேன்.” எனப் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.