சிஎஸ்கே போட்டியை பார்க்க வருபவர்கள் உண்மையில் ரசிகர்களா? – பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் கேள்வி!

ஐபிஎல்லின் 18வது சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. 2 போட்டிகளில் ஒரு போட்டியை வென்றாலும், அந்த வெற்றியையும் கஷ்டப்பட்டே பெற்றது சென்னை அணி. 

சென்னை அணியின் கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்திலேயே இம்முறை சென்னை அணி திணறி வருவது ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்திருக்கும் அதே வேளையில் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆர்சிபிக்கு எதிரான கடந்த போட்டியில் சென்னை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி ஆர்சிபிக்கு வரலாற்று வெற்றியாக மாறியது. அதாவது சிஎஸ்கே அணியை சேப்பாக்கத்தில் வைத்து 17 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்சிபி அணி தோற்கடித்து உள்ளது. இது சென்னை அணி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் படிங்க: மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஹர்திக் பாண்டியா! தடை விதிக்கப்படுமா?

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் செல்வது கடினம் என்றும், அப்படி செல்ல வேண்டும் என்றால் என்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாளருமான நாணி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே அவர்களது சொந்த மைதானத்தில் அதிக வெற்றிகளை பெறுவதுதான். ஆனால் ஆர்சிபி அணியுடன் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவி உள்ளது. 

சென்னை அணி பிளே ஆஃப் செல்ல வேண்டும் என்றால் 7 போட்டிகளில் 6 போட்டிகளை வெல்ல வேண்டும். சிஎஸ்கே அணியில் தொடக்க வீரரான கான்வே-வை கொண்டு வர வேண்டும். மீண்டும் ருதுராஜ் – கான்வே கூட்டணி தொடக்கத்தில் ரன்களை சேர்க்க வேண்டும். ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே போன்ற வீரர்கள் சுழற்பந்து வீச்சை திறன்பட எதிர்கொள்வார்கள். எனவே சிஎஸ்கே அணி இந்த மாற்றத்தை கையில் எடுக்க வேண்டும். அப்படி இந்த மாற்றத்தை செய்தால் மட்டுமே சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், சிஎஸ்கே போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் உண்மையில் ரசிகர்கள் தானா அல்லது தோனியை பிடிக்கும் என்பதற்காக மைதானத்திற்கு வருகிறார்களா என்று தெரியவில்லை. உண்மையான ரசிகர்கள் என்றால் தனக்கு பிடித்த வீரரும் ரன்கள் அடிக்க வேண்டும் அணியும் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், சிஎஸ்கே அணி தோற்றால் என்ன, தோனி சிக்ஸர் அடித்தால் போதும் என நினைக்கிறார்கள். அவர்கள் உண்மையான ரசிகர்களே இல்லை என நாணி தெரிவித்துள்ளார்.  

மேலும் படிங்க: ஐபிஎல் கோப்பை இந்த முறை ஆர்சிபி அணிக்கு தான் – தினேஷ் கார்த்திக் சொன்ன முக்கிய பாயிண்ட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.